பாகிஸ்தான் பிரிந்தது ஏன் ; இந்தியத் துணைக்கண்ட பெருநிலப்பரப்பை மத அடிப்படையில் இரு தேசங்களாக நோக்கியது பிற்போக்கானதும், செயற்கையானதும் ஆகும். இந்நோக்கு காலனியாதிக்கவாதிகளுக்கும், அவர்களது அடிவருடிகளான பெருநிலக்கிழார்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் உகந்ததாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருந்தது. எனவே அவர்கள் இந்தியா- பாகிஸ்தான் என்று நாட்டைப் பிரித்து மக்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தனர். ஆசியாவிலேயே பெரிய தேசிய இனங்கள் வாழும் வங்கத்தையும், பஞ்சாப்பையும் துண்டாடினர்.
காந்தி - ஜின்னா,காங்கிரஸ் - முஸ்ஸிம் லீக் இவர்களில் யாரைக் கதாநகனாகப் பார்ப்பது என்ற கேள்வி தவறான நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும். இவர்கள் துணைக்கண்ட மக்களின் நலன்களுக்காகப் போராடினார்களா? நலன்களை விரும்பினார்களா? என்பனவே பொருத்தமான கேள்விகள்.
அக்காலக்கட்டத்தில் இந்தியப்பொதுவுடமைக் கட்சி தேசிய இனச் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பெருநிலப்பரப்பை ஒன்றுபடுத்துவதை வலியுறுத்தியது. ஆனால் அது எடுபடவில்லை. இந்நோக்கே சரியானது என்று நடப்பு நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.
Be the first to rate this book.