நானறிய, தோழர் லீலாவதியின் படுகொலையைச் சுற்றிப்பின்னப்பட்ட முதல் தமிழ் நாவல் இதுதான். மையக்கதை என்னவோ மாயக்கண்ணன் - கோமதி என்கிற இரு பள்ளி ஆசிரியத் தம்பதிகளின் மணவாழ்க்கைதான் என்றாலும் கதை மாந்தர்கள் எல்லோருக்குள்ளும் லீலாவதியின் படுகொலை ஓர் உணர்வாகவும் நினைவாகவும் தொடர்ந்து தாக்கம் செலுத்துவதாக – அவ்வட்டார மக்கள் திரளின் சமூக உளவியலைத் தொந்தரவுக் குள்ளாக்குவதாக நாவல் நெடுகிலும் வந்துகொண்டே இருப்பது எனக்கு மிக முக்கியமானதாகப்படுகிறது.
நாவல் நிகழும் களங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அழகு நாவலின் உணர்வுகளுக்குத் துல்லியமான பின் திரையாக விரிந்துகொண்டே இருப்பது இன்னொரு சிறப்பு.
இது ஓர் அரசியல் நாவல் அல்ல. ஆண்-பெண் உறவு சார்ந்த ஒரு காதல் நவீனம்தான். ஆனால் அரசியலை விலக்கி வைக்க மெனக்கெட்டு முயற்சிக்காத நாவல். அதுவே இந்நாவலின் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்துகிறது.
Be the first to rate this book.