இசை போலவும் ஒரு சப்தம் சீனுவாசன் குரல் நாளத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. வார்த்தைகள் இல்லாது கவிதைகள் எதுவும் சொல்லாது வெறும் குரல் அசைவுகளாய், அலைகளாய் மனதில் உள்ள நட்பை அவன் இசையாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். விடியற் காலையில் பாடும் ராகமான பூபாளம் போல அது உள்ளிருந்து புரண்டு வந்தது.
“மெல்ல துயில் கலைவாய் நிதானமாய் எழுந்திருப்பாய் பெண்ணே புன்முறுவலுடன் உன் தினத்தை துவங்கு. தூக்கத்தை நீக்கு. தூக்கம் ஆனந்தமானதுதான்.
Be the first to rate this book.