நிலைத்திருக்கும் எல்லாவற்றின் பின்னும் அது அரசியலாகவோ இலக்கியமாகவோ சமூக தனி மனித வாழ்வாகவோ இருக்கலாம் உள்ள தோற்ற உண்மையை சந்தேகிக்கின்றன இந்தக் கவிதைகள். அனுபவமோ அறிவுரையோ அறவுரையோ எதுவாகவும் இருக்கலாம், அவற்றின் ஆழத்திலுள்ள நிஜத்தைத் தேடி ஆராய்கிறார் கவிஞர். இந்த இரண்டு நிலைகள் ஒன்றிணையும் புள்ளியில்தான் இந்தக் கவிதைகளின் உலகம் இயங்குகிறது. அந்த உலகம் எளிமையானது; அதே சமயம் பிரத்தியேகமானது. அந்த உலகில் கேட்கும் மொழி இயல்பானது; அதே சமயம் சிக்கலானது. எளிமையைச் சிக்கலானதாகவும் முரண்களை இயல்பானதாகவும் முன்வைப்பவர் சோலைக்கிளி.
Be the first to rate this book.