"இன்னும் என்னை ஏன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தள்ளாமலிருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. பைத்தியங்களுக்குப் போடும் இறுக்கமான கோட்டை அணிவதைவிட்டு இந்தக் கோட்டை ஏன் அணிந்திருக்கிறேன்? உண்மையிலும் நன்மையிலும் எனக்கு இன்னும் நம்பிக்கையுண்டு; நான் முட்டாள்தனமான இலட்சியவாதி, இந்தக் காலத்தில் அது பைத்தியக்காரத்தனமில்லையா? என்னுடைய உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைக்கும் பலன் என்ன? கிட்டத்தட்டக் கல்லடிபடுவதுதான். ஜனங்கள் என்னை நன்றாகக் குதிரையேறுகிறார்கள். நான் கேடுகெட்ட கிழட்டு முட்டாள். மிகவும் நெருங்கிய உறவினர்கள் கூட, என்மீது குதிரையேறுகிறார்கள்..."
Be the first to rate this book.