பள்ளிச் சிறுவன் - ஆசிரியை - சாதி - நீட் தேர்வு - மனவெறி - தற்கொலை / இவற்றின் கொழுகொம்பாக ஒரு முஸ்லிம் பத்திரிகையாளர்: இதுதான் கதை.
கதை சமகாலப் பிரச்சினையைப் பேசுகிறதோ என தோன்றலாம்.
சமகாலமல்ல, கால காலமாக உள்ள பிரச்சினையைப் பேசுகிறது, களமும் வடிவமும் முடிவும் நீங்கள் யூகிக்க முடியாதது.
ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வரும் சமூகத்தின் ஒடுங்கிய உள்ளம், ஏதோ ஒரு தருணத்தில், வாய்ப்பு கிடைக்கும் ஒரு சிறு கணத்தில்கூட, விடுதலையை நோக்கி அந்தச் சமூகத்தை உந்தித் தள்ளும் உள்ளியல்பைக் கொண்ட உளவியலையும்,
அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டே பழகிய சமூகம், தன்னுடைய அதிகாரத்திற்கும் ஆதிக்க மனோபாவத்திற்கும் எதிராக குரல்கள் உயரும் போது, மேலாதிக்க மனோபாவம் உறைந்து இறுகித் திமிறித் திளைத்த உள்ளம் பதற்றமடைந்து, அந்தப் பதற்றம் அவலமாக வெளிப்படும் உளவியலையும் நேரெதிராக நிறுத்தும் நெடுங்கதை இது.
Be the first to rate this book.