உண்டா, இல்லையா? கடவுளுக்கு அடுத்து அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் பேய்தான். ஆதி காலம் தொட்டு அறிவியல் ஆட்சி செய்யும் இந்தக் காலம் வரை அமானுஷ்யங்கள் மீதான அச்சமும் நம்பிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன.ஆவி, பேய், பூதம், மோகினி, கொள்ளிவாய்ப் பிசாசு, காட்டேரி, காத்து, கருப்பு என்று பல வடிவங்களில் மனிதனின் மனத்தை ஆக்கிரமித்திருக்கும் பேய், நிஜமா, கற்பனையா? ஆவிகள் பழிவாங்குமா? இறந்துபோனவர்களோடு மீடியம் வழியாக பேசலாமா? பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக விஷயங்களில் எவ்வளவு உண்மை உள்ளது? மரணத்துக்குப் பின் என்ன நடக்கும் என்னும் கேள்வியில் இருந்துதான் அத்தனை சந்தேகங்களும், அத்தனை பயங்களும், அத்தனை நம்பிக்கைகளும் உருகொள்கின்றன. உள்ளூரில் மட்டுமல்ல, முன்னேறிய நவீன நாடுகளிலும் பேய்கள் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன.அறிவியலுக்கு பொருந்தாது என்று சொல்லி பேயை நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பேயின் இருப்பை மறுதலிக்க முடிந்தது போல், பேய் பயத்தை ஒழிக்க அறிவியலாலும் முடியவில்லை என்பதுதான் நிஜம். இருண்ட உலகில் ஒளி பாய்ச்சும் இந்தப் புத்தகம், அனுபவம், அறிவியல், அமானுஷ்யம் மூன்றின் கலவை. நூலாசிரியர் சஞ்சீவி, ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘பாக்யா’ வார இதழின் நிர்வாக ஆசிரியராக பதினான்கு ஆண்டுகள் இருந்தவர். கண்ணன் சர்வதேச அறிவியல் ஆய்வு மையத்தின் நிறுவனர். அமானுஷ்ய விஷயங்கள் குறித்து அறிவியல்பூர்வமாக தொடர்ந்து எழுதி வருகிறார்.
Be the first to rate this book.