விஜயநகரப் பேரரசரைக் கொன்று ஆட்சியை கைப்பற்றுகிறான் சலுவா. அக்குடும்பக் கொலையில் தப்பிய குழந்தை வளர்ந்து இளைஞனாகி சென்னப்பாவாக சலுவாவிடமே உதவியாளனாக சேருகிறது. பேரழகி பத்மினி மீது மோகம் கொண்டிருக்கிறான் சலுவா. பத்மினிக்கோ சென்னப்பாவின் மீது காதல். விவரம் தெரியவர ஆத்திரமடைகிறான் சலுவா. சென்னப்பா - பத்மினி காதல் ஜோடி தப்பி ஓடுகையில் பிரிந்து, மீண்டும் இணைகிறது. (சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்ட இடம் வழங்கியது இந்த சென்னப்பாதான்) இந்த முக்கோணக் காதல் கதையே நாவல்.
தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை என்ற தமிழரால் எழுதப்பட்ட முதல் ஆங்கில சரித்திர நாவல் 1903 இல் லண்டனில் வெளியிடப்பட்டது.
விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட நாவலின் தமிழ் வடிவமே இது.
Be the first to rate this book.