வெண்முரசு எழுதும் கனவு எனக்கு 1990 முதல் இருந்து வந்தது. என் பழைய கடிதங்களில் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன் என நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான உளநிலையை, அறிவை உருவாக்கவே இருபத்தைந்தாண்டுகள் ஆயின. அந்தப் பயணத்தில் மகாபாரதத்தை ஒட்டி சில கதைகளை எழுதிப் பார்த்தேன். அவற்றில், ’திசைகளின் நடுவே’, ’பத்மவியூகம்’ போன்ற கதைகள் புகழ்பெற்றவை. இன்று வாசிக்கையில் அவற்றினூடாக வெண்முரசின் மெய்மையை நோக்கி நான் நகர்ந்து வந்திருப்பதைக் காண முடிகிறது. இக்கதைகள் என் மகாபாரதத் தேடலின் தடங்கள். அதேசமயம் நவீனக் கதைகளும் கூட.
Be the first to rate this book.