வதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வழிகாட்டு நூல் இது. ஐ.ஏ.எஸ். என்பது இளைஞர்கள் பலருக்கு வாழ்வின் லட்சிய கனவாக உள்ளது. அப்படி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றியை எட்டிப்பிடிக்க விரும்புபவர்களுக்கு அதை அடைய உதவும் வழிகளை, படிக்கும் அனுபவத்தை, கைக்கொள்ள வேண்டிய அறநெறிகளை ஒரு நண்பனைப் போல நின்று சுவையாக பேசியுள்ளார். படிப்பைச் சுமையாக நினைக்கும் இளைய தலைமுறைக்கு அதை சுகமாக மாற்றும் கலையை இந்த நூலில் கேலிச் சித்திரங்களுடன் கற்றுத் தருகிறார் நூல் ஆசிரியர். தனக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள், நண்பர்கள், தன்னுடைய மேலதிகாரிகள் என்று அனைவரிடமும் இருந்தும் ஒவ்வொரு நல்ல விஷயத்தைக் கற்றுக்கொண்ட இவர், அதையே வாசகர்களுக்கும் பயனுள்ள விதத்தில் எடுத்துக்கூறியிருப்பது இந்த நூலின் சிறப்பு. ‘எதிர்ப்படுகின்ற எல்லோரிடத்திலும் ஏதாவதொன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற திரைப்பட வசனத்தைப் போல தான் கற்றுக்கொண்டதை பிறருக்கும் பயன்படும்விதத்தில் கற்றுத் தருகிறார்; கற்றுப் பயன்பெறுங்கள்.
Be the first to rate this book.