குழந்தைகளுக்கு கதை எழுதுவது மிகவும் கஷ்டமானது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் தொடர்ந்து அதனை எளிதாக, குழந்தைகளுக்கு பிடித்தவிதம் எழுதிவருகிறார். அதற்கு காரணம் தான் எழுதப்போகும் கதையை அவரின் மகன் ஆகாஷிடம் கூறுவதாகும்.
சிங்கத்தின் பேப்பர் படிக்கும் பழக்கத்தின் வாயிலாக குழந்தைகளின் ஆர்வத்தினை ஏற்படுத்தும் கதையாசிரியர் , எப்படி சிங்கம் படிக்க கற்று கொண்டது என்பதை பல திருப்பங்கள் வாயிலாக எடுத்து செல்கின்றார். கழுதை , எலி , முயல் , பூனை , குரங்கு என குழந்தைகளுக்கு பிடித்த விலங்குகள் வர, கதை குழந்தைகளின் வாசிப்பை தடையின்றி எடுத்து சென்று , நாவலுடன் ஒன்ற செய்துவிடும் ஆற்றலை பெற்றுள்ளது.
எஸ். ராமகிருஷ்ணன் செய்திதாள் எப்போது தோன்றியது என்பதை குறித்து தகவல்களை நாவலில் குறிப்பிடுகிறார். செய்திதாளில் இடம் பெறும் செய்திகள் குறித்து பேசும் போது மனித இயல்பு குறித்து நகைக்கிறார். காட்டில் படிக்க தெரிந்த சிங்கம் என்ன மாற்றங்கள் செய்கிறது . சிங்கம் படித்ததால் காட்டில் என்ன மாற்றம் செய்தது என கதை விரிகிறது.
குழந்தைகளிடம் செய்தி தாள் படிக்கும் பழக்கம் இல்லை. செய்திகளை அறிந்து கொள்ளாமல் உலகை புரிந்து கொள்ள முடியாது. நியூஸ் பேப்பர் படிக்கிற விஷயத்தை முதன்மை படித்தி எழுதியிருப்பதாக ராமகிருஷ்ணன் கூறுகிறார்.
Be the first to rate this book.