’படத்தொகுப்பு’ எனும் இந்தப் புத்தகம் படத்தொகுப்பினைப் பற்றித் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு, அதைக் கற்றுக்கொள்ளும் நிலையில் ஆரம்பகட்டத்தில் உள்ளவர்களுக்கு, புதிய மாணவர்களுக்கு, சலனப்படத்தின் படத்தொகுப்பு எனும் உலகத்திற்குள் காலடியெடுத்து வைப்பவர்களுக்கு என அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். படத்தொகுப்பு நல்லவிதத்தில் வெளிப்பட, காட்சிகளும் நல்ல முறையில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி, இந்நூல், படப்பிடிப்பில் எப்படிக் காட்சிகளைப் படமாக்க வேண்டும், என்று ஒளிப்பதிவு சார்ந்த அடிப்படைக் கோட்பாடுகளையும், அணுகுமுறைகளையும் கூடவே சொல்லித்தருகிறது. ஒளிப்பதிவின் வாயிலாகப் படத்தொகுப்பின் நுட்பங்களைக் கற்றுத்தருகிறது.
கற்றலுக்கு எல்லையே கிடையாது. ஒவ்வொரு படத்தொகுப்பாளரும் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் நன்றாக ஓடுவதற்கு முன்னால், உங்களுக்கு நன்றாக நடக்கத் தெரிய வேண்டும். நடப்பது, அடிப்படை இலக்கணங்களை அறிந்துகொள்வது போன்றது. அந்த அடிப்படை தொழில்நுட்பங்களையும், விதிமுறைகளையும், இந்தப் புத்தகம் உங்களுக்கு வரையறுத்துக் கொடுக்கிறது. படத்தொகுப்பில் உள்ள பொதுவான நடைமுறைகளை இது தெளிவுபடுத்துகிறது. எடிட்டிங் மென்பொருளைப் பயன்படுத்தும் நுட்பத்தை, நீங்கள் ஒரு மாத காலத்திற்குள் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இச்சினிமா உலகில் ’படத்தொகுப்பு’ செய்வதற்கென காலங்காலமாக சில பொதுவான இலக்கணக் கூறுகள் பின்பற்றப்பட்டுவருகின்றன. நீங்கள், அவற்றைத்தான் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த முக்கியத்துவம் வாய்ந்த கருதுகோள்களைத்தான் இந்நூலில் படிக்கிறோம்.
5
Arunsivaraj 03-10-2021 11:03 pm