இலக்கிய ஆளுமைகளை நேர்காணல் செய்வதென்பது ஒரு நுண்ணிய அனுபவம். நமது ஆரம்பக் கேள்விகளில் அவர்களை இறுக்கம் தளர்த்தி பின்னர் இலக்கு நோக்கி இணைந்து செல்லலாம். இல்லையெனில், தொடக்கத்திலிருந்தே சுற்றி, வளைத்து ஆட வேண்டும்.
நான் உரையாடிய ஒவ்வொரு ஆளுமையும் தங்களைப் பகிர்ந்துகொள்வதில் வெவ்வேறு தனித்த இயல்புடன் வெளிப்பட்டார்கள். தனிக் கேள்விகளைப் பொருத்தவரையில், உள் தணிக்கையுடன் பதில்கள் வருவதை உணர முடிந்தது.
உரையாடலின் தொடர்ச்சியாய் எழும் கேள்விகளில், அவ்வாறான நேரம் இல்லை. இருந்தும் கூர்மையான பதில் தந்தவர்கள் உண்டு. பொதுவில், எந்தக் கேள்வியாக இருந்தாலும், சற்றும் ஆயத்தமின்றி தங்கு தடையில்லாமல் பதிலளித்த ஆளுமைகள் ஒருசிலரே. கேள்விகள் நிறைய இருக்கலாம். எந்த வரிசையில் கேட்கிறோம் என்பதைப் பொருத்தே பதில்கள் வடிவமையும்.
ஆளுமைகளின் பதில்களை அதே தொனியில் வாசிப்பவர்களுக்கு கடத்துவதுதான் சவால். முடிந்தவரை கடத்தியிருப்பதாகவே கருதுகிறேன். வாசிக்கும் போது நீங்கள் உணரலாம்.
-சுகதேவ்
Be the first to rate this book.