கேரளாவின் பாலா கிராமத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு மகளாகப் பிறந்த மேர்சி மாத்யூ என்னும் சிறுமி, தின்ஸை (மத்தியப் பிரதேசம்) கிராமத்தின் கோண்டு பழங்குடிகளில் ஒருத்தியாகவே மாறி, அம்மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராட்டக்களம்தான் பச்சை விரல். காடு சார்ந்த வாழ்க்கையால் விலங்குகளாகவே வாழச் சபிக்கப்பட்ட பழங்குடி இன மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி, இந்திய அரசியல் சட்டம் தன் குடிமக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகளை அவர்களுக்குப் பெற்றுத் தந்த ஒரு போராளியின் கதை இது. காடும் மலையும், மண்ணும் மரமும், காற்றும் நீரும் போற்றும் இயற்கை வாழ்வைத் தொழும் பச்சை விரலின் இதயத் துடிப்பு இது.
Be the first to rate this book.