தமிழ்த் தேசியத்தின் களிம்புகளைக் களைந்து சமகாலத்தின் வெளிச்சத்தில் அதைப் புத்துருவாக்கம் செய்யும் முயற்சி இந்நூல்.
சுப. உதயகுமாரனின் பச்சைத் தமிழ்த் தேசியம் பிரிவினைவாதம் அல்ல. தமிழ் வல்லரசுக் கனவு அல்ல. பெண்களைப் பண்பாட்டுப் பிசுக்கில் சிக்கவைக்கும் தந்திரம் அல்ல. இன வெறுப்பல்ல.
பெரும்பான்மைச் சாதிகளின் ஆதிக்கப் பேராசை அல்ல. பச்சைத் தமிழ்த் தேசியம் அடித்தள மக்களின் விடுதலைக்கான தேட்டம். மண்ணையும் மக்களையும் தேசத்தின் பெயரால், வளர்ச்சியின் பெயரால் அழிக்க முனையும் சூதுக்கு எதிரான போர்க்குரல். நறுக்கென்று உறைக்கும் மொழியில் ஆதங்கங்களையும் தீர்வுகளையும் ஆதாரங்களுடன் முன்வைக்கின்றன இக்கட்டுரைகள்.
Be the first to rate this book.