மனிதகுலம் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவியது. ஆப்பிரிக்க மக்களே உலகின் கடுமையான உடல் உழைப்பாளிகள். ஆனால் அவர்களுக்கான கல்வியும் நவீன வசதிகளும் முற்றிலுமாக மறுக்கப்பட்டது. வெள்ளையர்கள், குறுக்கு வழிகளில் உழைப்பைச் சுரண்டினார்கள். அதன் காரணமாகவே அவர்கள் அடிமை வியாபாரத்தில் இறங்கினார்கள். பல்லாயிரம் ஆப்பிரிக்கர்கள் நாடுகடத்தப்பட்டார்கள். அமெரிக்காவில் அடிமை வியாபாரம் சட்டபூர்வமானது. அப்பாவி அடிமைகளின் உரிமைகள் மறுக்கப்பட்டன. பல தலைமுறை அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்கர்கள், தொடர்ந்து போராடினார்கள். சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அடிமைகள் வாழ்வில் சிறு வெளிச்சம் பாய்கிறது. உள்நாட்டுப் போரின் முடிவில் சுதந்திரம் கிடைக்கிறது. விடுதலைபெற்ற மக்கள், ஓர் இலவமரத்தடியில் விடுவிக்கப்படுகிறார்கள். அந்த மரத்தை பின்னணியாகக்கொண்டு ‘பிளிகி’ என்ற சிறுமியின் வழியாக ஆப்பிரிக்க மக்களின் அடிமைத்தன வாழ்க்கை குறித்த தடங்களை ‘பச்சை வைரம்’ என்ற இந்தக் கதை தேடிச் செல்கிறது
Be the first to rate this book.