கதையை எங்கு துவங்குவது?எப்படி முடிப்பது?மையக்கருவாக எதை வைப்பது?என்று கதை சொல்லும் போது பெரியவர்களாகிய நமக்கு ஏற்படும் எந்த சிக்கலும்,குழந்தைகளுக்கு இல்லை.எங்கோ,துவங்கி எங்கெங்கோ வியாபித்து சட்டென்று முடிந்தும் விடலாம்.முடியாமலும் போகலாம்.அவர்களின் கதைக்கு எந்த எல்லையோ?வரையறையோ!கிடையாது.அவை மிகமிக இயல்பானவை அதனாலயே அவை அழகானதும் கூட.குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது,நாம்தான் சொல்லித்தரனும்,எனும் பெரியவர்களாகிய நம்மின் பொய்யான மதிப்பீடுகளை,எளிதாய் புறந்தள்ளி உள்ளனர் குழந்தைகள்.இக்கதைத் தொகுப்பில் உள்ள குழந்தைகளின் கதைகளில் கற்பனை,நீதி,திகில்,யதார்த்த பதிவுகள்,சமூக அவலங்கள்,நகைச்சுவை என அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது.குழந்தை இலக்கியம்,இனி குழந்தைகளின் வாயிலாகவே மெருகூட்டப்படும் என நம்புகிறோம்
Be the first to rate this book.