எதைச் செய்யவேண்டும் என்கிற அறிவு வாழ்க்கைக்கு முக்கியம், எதைச் செய்யக்கூடாது என்கிற அறிவும்தான். இவற்றில் ஒன்றைமட்டும் தெரிந்துவைத்துக்கொண்டால் நமக்குப் பாதி வெற்றிதான் கிடைக்கும். இந்தப் புத்தகம் ஒவ்வோர் அத்தியாயத்திலும் உங்களுக்கு இரண்டு மிட்டாய்களைக் கொண்டுவருகிறது. பச்சை மிட்டாய், நாம் நாள்தோறும் செய்யவேண்டிய ஒரு பழக்கத்தைச் சொல்லித்தந்து வழிகாட்டுகிறது, சிவப்பு மிட்டாய், எப்போதும் செய்யக்கூடாத ஒரு பழக்கத்தை விளக்கி எச்சரிக்கிறது. இரண்டும் சுவையான மிட்டாய்கள், பல்வேறு ஆளுமைகள், அறிஞர்கள், வெற்றியாளர்களிடமிருந்து திரட்டிய பயனுள்ள மிட்டாய்கள். ருசிக்கலாம், ஜெயிக்கலாம்!
Be the first to rate this book.