பதின்மூன்றாம் வயது தொடங்கி அறுபத்தொன்பதாம் வயதில் மறையும்வரை கவிதையின் பேரூற்றாக இயங்கியவர். தூதர், அரசியல்வாதி, மக்கள் உரிமைக்காகப் போராடிய போராளி என பிற ஈடுபாடுகளுடன் செயல்பட்டவர்.எனினும் அவரது முதன்மையும் முழுமையுமான அக்கறை கவிதையாகவே இருந்தது.கவிதையைத் தனது செயல்பாடாக நம்பினார். வாழ்க்கையின் எல்லாத் தருணங்களையும் உயிரின் எல்லா சலனங்களையும் இயற்கையின் எல்லா வியப்புகளையும் வரலாற்றின் எல்லா நிகழ்வுகளையும் கவிதையால் எதிர்கொண்டார்.'மொழியில் மைதாஸ் அரசனைப்போன்றவர் பாப்லோ நெரூதா. அவர் தொட்ட எல்லாமும் கவிதையாக மாறியது' என்று கார்லோஸ் ஃபுவான்டிஸ் கூறுவதில் பெருமிதம் சார்ந்த மிகையிருக்கிறது.பொய்யில்லை. தனது சமகாலத் தலைமுறையைப் பாதித்தது போலவே மறைந்து முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளான பின்னும் புதிய தலைமுறையினாரால் வாசிக்கவும் போற்றவும்படுகிறார் என்பதில் பெருமிதம் கொள்ள வாய்ப்பில்லாமலில்லை.
- விமலாதித்த மாமல்லன்
Be the first to rate this book.