ஓர் எளிய நகலெடுக்கும் எழுத்தாளர் தேவுஸ்கின் – அவருடைய தூரத்து உறவுப் பெண்ணான வாரென்கா இருவருக்குமிடையே நடந்த கடிதங்களின் வரிசையாக ‘பாவப்பட்டவர்கள்’ நாவல் அமைந்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வாழ்ந்த விளிம்பு நிலை மக்களின் கொடிய வறுமையும், இரங்கத்தக்க வாழ்க்கையும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. வாரென்காவுக்கு உதவி செய்ய தேவுஸ்கின் முயலும்போது அவர் மேலும் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு அவருடைய அன்புக்குரிய காதலியும் அவரிடமிருந்து பறிக்கப்படுகிறாள்.
இது உலக நாவல் இலக்கியத்தின் ஒளிச்சுடரான தஸ்தயேவ்ஸ்கியின் முதல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்காலத்திய அவருடைய புகழ்பெற்ற நாவல்களின் கூறுகளை இந்த நாவல் அடையாளம் கட்டுகிறது.
Be the first to rate this book.