ஆசிரியர் அமைத்துள்ள வாக்கியங்களிலும் காட்சிகளிலும் உள்ள அர்த்தச்செறிவு காரணமாக ஒவ்வொரு வாசகனும் முதலில் வரிகளைக் கடந்து போய், உடனே இழப்பு உணர்வால் தாக்குண்டு பின்னோக்கி வந்து திரும்பத் திரும்ப படித்து அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளவே முயல்வான். அதற்கு தூண்டுதல் தருகிற எழுத்து ஜெயந்தனுடையதாகும். முந்தைய தலைமுறைப் படைப்பாளிகள், சமகாலப் படைப்பாளிகள் ஆகிய எவரின் நிழலும் கவியாமல் சுயமாக, அசலாக ஜெயந்தன் எழுத்துக்கள் அமைந்திருப்பது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சம். தத்துவபோதமும், கலா சிருஷ்டித் திறனும் உள்ள படைப்பாளியிடமிருந்து எப்படிப்பட்ட இலக்கியம் உருவாகும் என்பதற்கு நல்ல சாட்சியம் ஜெயந்தனின் “பாவப்பட்ட ஜீவன்கள்”.
-என்.ஆர்.தாசன்
Be the first to rate this book.