இன்றையத் தமிழ்த் திரையிசைப் பாடல் வரலாற்றில் தவிர்க்கமுடியாத பெயர் – யுகபாரதி. இரண்டாயிரமாவது ஆண்டுமுதல் இன்றுவரை ஏறக்குறைய ஆயிரம் பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். தொடர்ந்து வெகுமக்களின் விருப்பத்துக்குரிய பாடலாசிரியராக இருந்துவரும் இவர் இசையின் நுட்பங்களை உணர்ந்து அதற்கேற்ப விரைவாகவும் நிறைவாகவும் பாடல்களை எழுதக்கூடியவர். திரைத்துறையின் சவால்களை தம்முடைய இலக்கியப் பயிற்சியினால் எளிதாக எதிர்கொள்ளும் யுகபாரதியின் திரைப்பாடல் மொழி சிலாகிப்புக்குரியது. எளிய சொற்கள் மூலம் எந்தச் சூழலுக்கும் பொருத்தமான பாடல்களை எழுதுபவராக யுகபாரதி அறியப்படுகிறார்
இந்நூலில், இவரது இருநூற்றி ஐம்பது திரைப்பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாடலுக்கும் முன்னுரையாகச் சில தகவல்களை, பங்குபற்றிய பிற கலைஞர்களை, பாடல் நிகழ்வுறும்பொழுது நடந்த உரையாடல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். திரைப்பாடல்களையும் பாதுகாக்கத்தக்க ஆவணமாக மாற்றக்கூடிய முயற்சியை இந்நூல் செய்திருக்கிறது.
Be the first to rate this book.