காட்டி சுப்ரமண்யா, திருப்பதி, சொரவனஹள்ளி, மந்திராலயா போன்ற புண்ணியத் தலங்களுக்குப் பாதயாத்திரையாகச் சென்றபோது தனக்கேற்பட்ட பக்தி மற்றும் வாழ்க்கை சார்ந்த அனுபவங்களை ஒரு புனைவுக்கேயான சுவாரஸ்யத்துடன் விவரிக்கிறார் ஆ. பெருமாள்.
கால மாற்றத்தால் வரும் ஒவ்வாமை நோயினால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து பத்தடிகூட நடக்க இயலாத நிலையிலிருந்தவர் பக்தியுடனும் தன்னம்பிக்கையுடனும் மேற்கொண்ட இந்தப் பாதயாத் திரைகளினால் அந்நோயிலிருந்து முழுமையாகக் குணமானதையும் கூறுகிறார்.
யாத்திரைகளின்போது கிடைத்ததை உண்டு, சூழ்நிலைக்கேற்ப உறங்கி, பல தரப்பட்ட மக்களோடு பழகுவதால் உடலும் உள்ளமும் பக்குவப்படுவதை அனுபவபூர்வமாக விளக்கும் வித்தியாசமான பயண நூல் இது.
Be the first to rate this book.