இப்புத்தகம் ஐந்து உட்பகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உட்பகுதியும் வெவ்வேறு தலைப்புகளையும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உட்கருத்துகளையும் கொண்டதாக அமையப்பெற்றிருக்கிறது.
இந்நூல் மனவியல் மற்றும் குணவியலை மையமாகக் கொண்டே படைக்கப்பட்டிருக்கிறது. இவைகளுடன் தொடர்புடைய சமுதாய முன்னேற்றக் கருத்துக்களையும் இயன்றவரையில் விதைக்க முற்பட்டிருக்கிறது.
சாமானியக்கும் எளிதில் சென்றடையவேண்டும் என்ற நல்நோக்கத்தினால் மிகவும் எளிமையானத் தமிழ் வார்த்தைகளையும் சிறுசிறு வாக்கியங்களையும் உட்கொண்ட வசனக்கவிதைகளாக இயற்றப்பட்டுள்ளது . கவிதை இலக்கணத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தைவிட கருத்துக்களுக்கே முதலிடம் கொடுத்து வடிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்நூல் ஒரு குறிப்பிட்ட மொழி இனம் சேர்ந்தமைந்த சமுதாயத்திற்கும் மதத்திற்கும் மட்டுமான கருத்துகளை பகிர்ந்துகொள்ளவில்லை. இந்நூலின் கருத்துக்கள் ஒட்டுமொத்த மனித இனத்திற்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசியமான விஷயங்களை உளவியல் அலசலாக தந்துள்ளதெனலாம்.
Be the first to rate this book.