இன்றைக்குத் தமிழில் பார்ப்பனிய இந்துத்துவப் பாசிசத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய உரையாடல்களில் கவனம்பெற வேண்டியது இந்நூல்.
அரை நூற்றாண்டுக் காலம் பொதுவுடைமை இயக்கங்களில் தலைமைப் பொறுப்புகளை மேற்கொண்ட தோழர் கே. முரளியின் விரிந்த அனுபவமும் ஆழ்ந்த வாசிப்பும் இந்த நூலில் மிளிர்கிறது.
பார்ப்பனியமும் முதலாளியமும் இந்திய உழைக்கும் மக்களின் இரண்டு முதன்மையான எதிராளிகள் என்கிற அம்பேத்கரின் நோக்கை இறுகப்பற்றிக் கொண்டு, முன்சென்று சிந்திக்கின்றார் தோழர் கே. முரளி.
பார்ப்பனிய இந்து பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பே இன்றைய மிக முக்கியமான பிரச்சனை என்பதில் இந்த உரையாடல் தொடங்குகிறது. பார்ப்பனிய இந்து பாசிசம் இன்றைய ஒட்டுமொத்த இந்திய ஆளும் வர்க்கங்களின், அவர்களின் அரசியல் பிரதிநிதிகளின் அரசியல் சிந்தாந்தக் கருவியாக மாறியது என்பதை ஆழமாக விவாதிக்கிறது. ஆயினும் இந்த உரையாடல் இத்துடன் நின்றுவிடவில்லை. சோவியத், சீனா முதலான சோசலிசக் கட்டுமான அனுபவங்கள் முதல் இந்தியத் துணைக்கண்டத்தில் சாதிப் பிரச்சினையைக் கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்டது வரை உரையாடல் ஆழமடைந்து செல்கிறது.
Be the first to rate this book.