பார்ப்பன மேலாதிக்கத்தை வார்த்தெடுத்ததில் மதமும் புராணமும் வகித்த பங்கு மிக முக்கியமானது.
ஆதிக்கக்காரர்களுக்கும் அடக்கப்பட்டோருக்கும் இடையிலான உரையாடலுக்கு உதவிய கருவிகள் என்ற வகையில் அவை அந்த இரு சாராருக்கும் இடையில் சமூகப் பிணைப்புகளை ஏற்படுத்தின. இவற்றின் வழியாக அவை ஆதிக்கத்திற்கு எதிரான சக்திகளின் ஆற்றலை மட்டுப் படுத்தின. அது ஒரு சிக்கலான செயல்முறை.’ அதை விளங்கிக் கொள்ள உதவும் மிகச் சிறந்த ஆய்வு நூல் இது எனில் அது மிகையன்று!
அத்துடன், பார்ப்பனக் கோட்பாட்டின் மேலாதிக்கத்திற்கு இட்டுச் சென்ற சில சமூக, இறையியல் பாங்கிலான அமைப்புகளின் தோற்றத்துக்குப் பின்புலமாய் அமைந்த வரலாற்றுச் சூழல்களை விளக்கமாக எடுத்துரைக்கவும் இந் நூல் முயல்கிறது !
Be the first to rate this book.