கருமாத்தூர் மண்ணிலிருந்து பாப்பாபட்டிக்கு வந்த ஆண்டாயி ஆச்சி, உத்தப்பநாயக்கனூர் ஜமீன்தாரிடம் ஒச்சாண்டம்மன் கோவிலுக்காக 96 குளி நிலத்தை எழுதி வாங்கிய வரலாறு வாசிப்பவர்களை வசியப்படுத்துகிறது. நூலுக்குள் சொல்லப்பட்டிருக்கும் சில கிளைக்கதைகளெல்லாம் இன்னும் ஐந்தாறு பாகுபலி திரைப்படங்களுக்கான திரைக்கதைகளாகும். தன் முன்னோர்களின் பெருமைகளை - பெருமிதங்களை உணர்ந்துகொள்வதுதான் வாழும் தலைமுறைக்கு வலிமை தருவதாகும். இந்த நூல் உசிலம்பட்டி மண்ணின் மீது எனக்கிருந்த மதிப்பை இன்னும் இன்னும் உயர்த்திவிட்டது. சிந்துசமவெளி நாகரிகத்தைப் போல இது எங்கள் சமவெளி நாகரிகம் என்று கருதிப் பெருமையுறலாம். இந்த இனம் வாழும் காலம்வரை இந்த இன வரலாற்றின் ஒரு பகுதியைப் பதிவு செய்த புலவர் அ. சின்னன் ஐயா அவர்களின் திருப்பெயரும் நிலைத்திருக்கும்.
- ‘பத்மபூஷன்’ கவிப்பேரரசு வைரமுத்து
Be the first to rate this book.