இசை குறித்தும் இலக்கியம் குறித்தும் ஏனைய கலை வடிவங்கள் குறித்தும் ஆழமாகத் தெரிந்துகொள்ள பல நூல்கள் இருக்கின்றன. ஆனால், தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றுகலந்துதிவிட்ட திரைப்பட உலகம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் தமிழில் அரிதாகவே இருக்கின்றன. தியடோர் பாஸ்கரனின் இந்நூல், அந்தக் குறையைத் தீர்த்துவைக்கிறது. மௌனப்படம் தொடங்கி வண்ணப்படம் வரையிலான தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி இதில் பதிவாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பாதையைத் தீர்மானித்த முக்கியப் படங்களையும் படைப்பாளிகளையும் விமரிசனப்பூர்வமாக இதில் அணுகுகிறார் தியடோர் பாஸ்கரன். அடிப்படை புள்ளிவிவரங்களைத் தாண்டி, தேசியம், திராவிடம் போன்ற சித்தாந்தங்கள் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கத்தை இந்நூல் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறது. பொழுதுபோக்கு, பிரசாரம் ஆகிய எல்லைகளைக் கடந்து நம் வரலாற்றோடு கலந்துவிட்ட ஒரு தவிர்க்க இயலாத சக்தியாகத் தமிழ் திரையுலகம் மாறியுள்ளதை இந்தப் புத்தகம் சான்றாதாரங்களோடு நிரூபிக்கிறது. தமிழ் சினிமாவின் வரலாறு குறித்து, அதன் போக்குகள் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்ற தியடோர் பாஸ்கரனின் முக்கியமான பதிவு இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.