நீ ஆண்! நீ பெண்! உனக்கான உலகம் விஸ்தாரமானது. உலகின் இன்பங்கள், இயல்புகள், ஏன் இந்த உலகே உனக்கானதுதான். உனக்குப் போக மிஞ்சியதுதான் மற்றவர்களுக்கு. நீ வாழப் பிறந்தவன்; ஆளப் பிறந்தவன்; ஏனென்றால் நீ ஆண்! ஆம்! நீ ஒரு ஆண்! உன் உலகம் குறுகலானது, உலகம் உனக்கு இருள் மயமானது. மற்றவர்கள் அனுபவித்து எஞ்சிய மிச்ச மீதங்களே உனக்கானவை. நீ அடிமையாகப் பிறந்தவள். ஆண் மகனின் போகப் பொருளாய் அடங்கியப் போகப் பிறந்தவள்; ஏனென்றால் நீ பெண்! ஆம்! நீ ஒரு பெண்! … காலங்காலமாய் இந்தப் பாலினப் பாகுபாடு முகத்தில் அறைந்து சொல்லப்படும் உண்மை. இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளாவிய அளவில் அடிமைச் சமுதாயமாகவே இருத்தி வைக்கப்பட்டிருக்கும் பெண்ணினம். மாற்ற முடியாத நியதியாக, மாறத் தயாராக இருந்தாலும் காலுக்குக் கீழே தள்ளி மிதிக்கத்தயாராய் இருக்கும் ஆணினம். இதுதான் நியதி என்றே என்றைக்கும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் வறட்டுவாதம். இவற்றின் ஆணிவேரை சற்றே அசைத்துப் பார்க்கும் முயற்சிதான் இந்நூல்.
Be the first to rate this book.