பெண் விடுதலைக்குரிய மாற்றுச் சிந்தனை முறையின் ஒன்றாக கருதப்படும்
"பாலாற்ற பெண்பால்" (The Female Eunuch) என்ற இரண்டாம் அலைப் பெண்ணிய நூலின் சுதந்திரமான தமிழ் மொழிப்பெயர்ப்பாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் Eunuch என்ற சொல் அக்கால அரண்மனை அந்தப்புரங்களில் பண்ணை மகளிர்க்கு காவலாளியாக வைக்கப்பட்ட செயற்கையாக அழியாக்கப்பட்ட ஆணைக் குறிக்கும் வடமொழியில் இதை நபும்சகம் என்பர்.
தந்தைவழிச் சமூகத்தில் பெண் தனது இயல்பான பால் வாழ்வைத் தற்சுதந்திரமாக வாழ இயலாதவாறு ஆண்பாலின் நுகர்வுக்கு ஏற்றவாறு பெண்பால் நபும்சகமாக ஆக்கப் பட்டிருக்கிறாள்.
பாலாற்ற பெண்பாலாக காயடிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை குறிப்பதாக 'The Female Eunuch' பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் அலைப்பெண்ணியத்தின் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்த படைப்புகளைப் போல இந்நூல் இல்லாமல் ஆண், பெண் பால்களின் மலட்டுத்தனம்,காயடிப்பு,நபும்சகம் ஆகிய சிதைவுகளை வலியுறுத்தி கூறுகிறது.
Be the first to rate this book.