1961 ஆம் ஆண்டு இப்புத்தகத்திற்கு புலிட்சர் பரிசு கொடுக்கப்பட்டது.
முப்பதுகளில் இனப் பிரிவினை வழக்கத்திலிருந்த அலபாமா நகரில் வெள்ளையினத்தைச் சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டான் என குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நீக்ரோ இளைஞன் டாம் ராபின்சனுக்காக, வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த ஆட்டிகஸ் ஃபின்ச் வாடாத முன்வந்தார். நகரத்தில் இருந்த பெரும்பாலன வெள்ளையின மக்கள் இதை விரும்பவில்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட இனத்தவரின் உரிமைக்காக வாதாடியே தீர்வேன் என்கிற முடிவிலிருந்து ஆட்டிகஸ் சிறிதும் விலகவில்லை. வழக்கின் முடிவு என்ன..? இந்த வழக்கினால் அலபாமா இனப்பிரச்சனையில் மாற்றம் ஏற்பட்டதா..? நீக்ரோ இளைஞனின் கதி என்னவாயிற்று..? ஆட்டிகஸின் ஆறு வயது மகள் ஸ்கெளட் ஃபின்ச்சின் பார்வையில் ஹார்ப்பர் லீ விவரிக்கிறார்.
Be the first to rate this book.