முஸ்லிம்களை அந்நியர்களாக சித்தரித்து அவர்களின் ஆட்சிக் காலத்தை ‘இருண்ட காலமாக’ குறிப்பிடும் போக்கு வெகுநாட்களாக தொடர்கிறது. சிறுபான்மையினர் மீது அவதூறுகளை பரப்பி மாணவர்கள் மத்தியில் விஷத்தை விதைப்பவர்கள் எத்தகைய எதிர்கால தலைமுறையினரை உருவாக்க விரும்புகிறார்கள்?
இச்சூழலில்தான் சிவகுருநாதன் எழுதிய இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. பாடப்புத்தகங்களில் பாசிசம் குறித்து பேசுபவர்கள் கூட பெரும்பாலும் ஒன்றிய பாடத்திட்டம் குறித்தே பேசுகின்றனர். ஆனால், இந்நூல் தமிழ்நாடு பாடநூல்களில் உள்ள அபத்தங்களையும் குறைகளையும் சுட்டிக்காட்டுகிறது. திராவிட பாரம்பரியம் நிறைந்த தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியல் இந்த அளவிற்கு புகுத்தப்பட்டிருப்பதை காணும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது
Be the first to rate this book.