புதிதாய் வருபவர்கள் "இயற்கை வேளாண்மை" என்பதற்கு, இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும், நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் என்று பொருள் கொண்டால், ஃபுகோகா அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார்.சரியாகக் கூற வேண்டுமானால், வேட்டையாடி சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக் காலம். பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டு பிடிப்பாகும். அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை ஆக்கிரமித்து அதை மேம்படுத்துவதில் அல்ல.
Be the first to rate this book.