ஒறுப்பு - தென்மாவட்டங்களின் கரிசல் பூமியில் வலம் வருகிறது. வெள்ளந்தியான மக்களின் வாழ்க்கையில் கோப தாபங்களோடு கூடிய நடைமுறைகள் அனைத்திலும் மக்கள் நெஞ்சிலும் நினைவிலும் வாயிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் வட்டார மொழிச்சொற்கள் ஏராளம். 'திகுடு முகுடான கூட்டம்', 'தாக்காட்டுவதற்கு என்ன செய்வது', 'எரியிறத இழுத்தா கொதிக்கிறது தன்னால அடங்கும்' என வட்டார வழக்குச் சொற்றொடர்கள் நாவல் முழுவதும் நிறைந்துள்ளன. அக்காலத்தில் கோவில் விழாக்களும் நாடகக்கலைஞர்களும் ஊரையே ஆட்டிப் படைத்திருக்கிறார்கள். அதைச்சொல்லும் பாத்திரப்படைப்புகளும் பரிணமித்துச் செல்லும் நிகழ்வோட்டமும் வாசகனின் ஆவலைத் தூண்டுகிறது.
- புலவர் சுவி. சத்திய சாமுவேல்
Be the first to rate this book.