"பதம்பார்க்க இட்ட ஒரு துளி மாவு
மெதுமெதுவாக மேலே வருகிறது
...
...
கண்மூடி மீண்டும் யோஹத்தில் அமர்கிறேன்.
மோனம்... மோனம்... மோனம்...!"
இந்தக் கவிதையை, பதம் பார்க்க இட்ட ஒரு துளி மாவாக கார்த்திகா முகுந்த் இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். கவிதைத் தருணத்தைத் தொன்மப் பலகணியிலும் கவிகள் புத்தம்புதிதாக உருவாக்க முடியும். இன்று புனைவில் பலரும் செய்துகொண்டிருக்கும் தொன்ம Retold அல்லது Recreate இல்லை. தொன்மப்புள்ளியில் இருந்து கவிதை துள்ளிக் குதிக்கிறது. காந்திமதித்தாயோடு கார்த்திகாவும் மோனத்தில் அமர்வது கவிதையாகிறது. கார்த்திகாவின் கவிதை, கட்டற்று எல்லாப் பக்கங்களிலும் துள்ளிக் குதித்துப் பாயும் என்னும் நம்பிக்கையை இத்தொகுப்பு நமக்கு வழங்குகிறது.
- சமயவேல் (முன்னுரையிலிருந்து...)
Be the first to rate this book.