தக்கிகளின் வெறியாட்டமும் சாலையோரக் கொலைகளும், அவற்றை மதநம்பிக்கைகளின் பேரில் வளர்த்தெடுத்த கும்பல்களும் நிறைந்த ஒரு காட்டுமிராண்டித்தனமான 19 ஆம் நூற்றாண்டின் வட இந்திய சரித்திரத்துடன் ஒரு காதல் கதையைப் பிணைத்து இந்த நாவலை உருவாக்கியுள்ளார் பிலிப் மெடோஸ் டெய்லர்.
வழிப்பறிக் கொள்ளையர்களைப் பற்றிய ஆங்கில நாவலின் தமிழாக்கம் இந்த நூல். ஆங்கில நாவலை எழுதிய மெடோஸ் டெய்லர் பிரிட்டிஷ் இந்தியாவில் ஹைதரபாத் நிஜாமின் ஆட்சியில் காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றியவர். ஆங்கில நூலின் தலைப்பு, ‘Confessions of a Thug’. இது 1839இல் லண்டனில் வெளியானது. சில குற்றவாளிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் வெளியான ஒரு சில நாட்களில் மெடோஸ் டெய்லர் லண்டனில் புகழ்பெற்ற எழுத்தாளரானார். ஐரோப்பா முழுவதும் பேசப்பட்ட புத்தகமாக இது மாறியது. முதன் முதலாக தமிழில் தற்போது தான் வெளிவந்துள்ளது.
Be the first to rate this book.