அனுபவங்களின் நினைவடுக்குகளை ஒரு சேர சரித்துவிடுகிறது தமயந்தியின் “ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்” என்னும் இச்சிறுகதைகள். யாராய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எவ்வித அறிதலை சுமந்து திரிகிறோம் என்கிற கேள்விகளையும் நமக்குள் எழுப்புகின்றன. எவ்விதக் குற்றவுணர்ச்சியுமின்றி சாட்சியங்களாய் நிற்கும் ஆண்மைகளையும், பலாத்காரம் மிகுந்த அமைப்பில் தொண்டூழியங்களை செய்துவிடும் பெண்மையையும் நிர்பந்திக்கக் கூடியவை இக்கதைகள். லேபிள்கள் இல்லாமலே சுயம் சிதையாமல் ஆணோ பெண்ணோ வாழப் பழக வேண்டும். இந்தக் கதைகள் அதைப் பிரதிபலிக்கக் கூடும்.
Be the first to rate this book.