தார்மீக அடிப்படையிழந்த அரசமைப்பின் தீவினைகள் நிரபராதியான குடிமக்களின் வாழ்க்கையை எவ்வாறு சிதைக்கும் என்பதன் சரித்திரசாட்சி ஈச்சரவாரியர். அவரது ஒரே மகன் ராஜன் நெருக்கடிநிலைக் காலத்தில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டான். அதற்குப் பின் அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தந்தைக்கோ உலகுக்கோ தெரிவிக்கப்படவில்லை. மகன் என்ன ஆனான் என்று தேடி அலைக்கழிவதே அந்த வயோதிகத் தகப்பனின் வாழ்நாள் சம்பவமாயிற்று. ஓயாத அந்த அலைச்சலின் அனுபவங்களைப் பொதுச் சமூகத்தின் கவனத்துக்கு உட்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை ஈச்சரவாரியரின் நினைவுக் குறிப்புகள். ஒரு தகப்பன் தனது மகனைப் பற்றி நினைவுகூரும்போதே ஓர் அரசு தனது குடிமக்களுக்குச் செய்த சதியும் அவர்கள் மீது நடத்திய வன்முறையும் கலந்த ஓர் இருண்ட காலகட்டம் வெளிப்படுகிறது. விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் அதிகாரபீடம் நடத்திய அரசுப் பயங்கரவாதத்தின் சான்று இது.
Be the first to rate this book.