இருளின் அரங்கத்தில் ஒளியின் பிம்பங்கள் அசைவது போல் சமூகத்தின் மூடப்பட்ட சன்னல்களின் பின்னே நூலாம்படைகளாய் சிக்கிக்கொண்ட பெண்ணின் அகவெளியானது மொழியின் வழியாக கவிதையாகவும், கவிதையின் வழியாக வாழ்வின் அகம் புறம் என்ற பேதமின்றி சொற்களையும் விடுதலை செய்கிறது.
வாழ்வின் தீராத வெம்மைகளுக்கு இடையேயும் இடைவிடாத ஒரு வாசிப்பின் இடைவெளியில் பெரும் மழைக்குப் பின்னான சிறு தூறல் போல் அவ்வப்போது என் மனவெளியில் விழும் சொற்களை அரிதாக கைப்பற்றிக் கொண்ட தருணங்களே இக்கவிதைகள்.
- மஞ்சுளா
Be the first to rate this book.