இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் தமிழக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் சமூக மேம்பாட்டிற்கும் தீவிரமாகப் பணியாற்றிய அண்ணல் அயோத்திதாசரின் சிந்தனைகளையும், எழுத்தையும் ஒப்பீட்டு ஆய்வு முறையியலின் துணையோடு இந்நூல் விளக்கிச் செல்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகங்களின் விடுதலை என்ற சொல்லாடலில் அறம், நீதி, நியாயம், சாந்தம் போன்ற கருத்தாக்கங்களின் தேவையையும் அவற்றை அயோத்திதாசர் எவ்வாறு திறம்படத் தன்வாழ்நாளில் நிறைவேற்றினார் என்பதையும் இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. அயோத்திதாசர் தொடர்பான ஆய்வுகளை பல்வேறு அறிவியல் புலங்களுக்குள் அறிமுகம் செய்யும் முயற்சி இது.
நூலாசிரியர் ப. மருதநாயகம் தமிழிலக்கியத்திலும், ஆங்கில இலக்கியத்திலும் முனைவர் பட்டம் பெற்றவர். பாண்டிச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் (PILC) இயக்குநராக பணியாற்றியவர்.
பாளையங்கோட்டையில் செயல்படும் ‘கல்லாத்தி’ என்ற பண்பாட்டு மையம், ஒட்டு மொத்த மானுட விடுதலையை நேசிக்கும் அனைவருக்குமான நிழல். மாற்றுக் கதையாடல்களை உற்சாகப்படுத்தி வவளியிடும் பணியினை செய்து வருகின்றது.
Be the first to rate this book.