பாருப்பா! இருளிலிருந்து ஞானத்துக்கு எப்போ வந்தேன்னு கேட்டிருக்காரு. நகரத்தில் இருட்டில்லாம வெளிச்சமா இருக்கும்?' என்று கூறிவிட்டுக் குதிரையை நகர்த்தி நண்டு பிடியில் என் ராஜாவையும் ராணியையும் மடக்கினார்.
வேண்டுமென்றே ஒரு பைத்தியக்காரன் பேசுவதற்கெல்லாம் வியாக்கியானம் கொடுக்கிறாரா அல்லது வைத்தியர் கேட்ட கேள்விக்கு இப்படியும் ஓர் அர்த்தம் இருக்குமா என்று யோசித்தேன். மெல்ல மெல்ல ஆசாரி தன்னைப் பைத்தியக்கார வைத்தியனின் சிஷ்யனாக்கிக் கொண்டு வருகிறாரோ என்று யோசித்தேன்.
அதற்கிடையில் என் காய்களைத் தப்புவிப்பதற்கு ஒரு வழி இருப்பது புரிந்தது. ஆசாரி எதிரியைத் தோற்கடிப்பதில் நாட்டம் காட்டுவதில்லை. புதிய புதிய எதிர்ப்புக்களை உருவாக்குவதிலேயே ஆர்வம் காட்டுவார். இது எனக்குத் தாணு ஆசாரியுடன் செஸ் ஆட ஆரம்பித்த நாட்களிலேயே புரிந்துவிட்டது. ஒருநாள் கேட்டபோது 'எதிரி இருந்தாத்தானே தோற்கடிக்க' என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்.
Be the first to rate this book.