1965 ல் இந்தியா-பாகிஸ்தான் போர் மூண்டபோது ஸ்ரீதர் எண்ணத்தில் உருவான கதை “ஒரு பிடி மண்”. அதை திரைப்படமாக எடுக்க ஆயுத்த வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது,தாஷ்கண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இப்படம் எடுக்கப்படவில்லை எனினும் ஸ்ரீதர் அந்த திரைக்கதையை பொம்மை இதழில் வெளியிட மகிழ்வுடன் ஒப்புகொள்ள 1968முதல் 1969 வரை வெளியிடப்பட்டு, வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. 50 ஆண்டுகளுக்கு முன், வரலாற்றுப் பின்னணியுடன் எழுதப்பட்ட திரைக்கதை இன்று புத்தகமாக வெளியிடக் காரணம்? ஒன்று அன்றைய வாசகர்கள் படித்து மகிழ்ந்த “ஒரு பிடி மண்” திரைக்கதையை இன்றைய தலைமுறையினரும் படித்து மகிழ வேண்டும். இன்னொன்று ஒரு பிடி மண் திரைக்கதையை இந்திய திருநாட்டின் வடமேற்கு எல்லைப்புறத்தில் இருந்த போர்மேக பதற்ற சூழ்நிலையை மையமாக வைத்து குடும்ப பாங்கான கதையாக பின்னப்பட்டது. அந்த நிலை தேசப்பற்றும் தியாக மனப்பான்மையும் 50 ஆண்டுகள் கடந்து, இன்றும் இருப்பதை ஒரு பிடி மண் கதையை படிக்கும்போது உணரலாம்.
Be the first to rate this book.