தற்போது, பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயமும் / அவசியமும் ஏற்பட்டுள்ளது. அத்தகைய பெண்களுக்கு உடல் அளவிலும், மனத்தளவில் எத்தனையோ நிர்ப்பந்தங்களும், அசௌகரியங்களும் ஏற்படுகின்றன. அவற்றில் இருந்து தப்பிக்க, அவர்களுக்கு முதற்கட்டமாக அவர்களுடைய உடலைப் பற்றிய முழுமையான தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். ஆண்களோடு சமம் என்று மனத்தளவில் நினைத்துக் கொண்டாலும், உடல் அளவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்தப் புத்தகம் நிச்சயம் உதவியாக இருக்கும்.
உடல் மற்றும் மனத்தளவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? வயது அதிகரிக்க, பெண்களின் உடல் மற்றும் மனத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? திருமணத்துக்குப் பிறகு கணவனுடனான தாம்பத்ய உறவை எப்படி எதிர்கொள்வது? மாதவிலக்குக் காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களை எப்படிச் சந்திப்பது? மெனோபாஸ் கட்டத்தில் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள் என்னென்ன? என்பது குறித்த பல விஷயங்களை விரிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
பருவம் அடைந்தது முதல் மாதவிலக்கு முற்று என்று சொல்லப்படும் மெனோபாஸ் கட்டம் வரையில், ஒரு பெண்ணுக்கு உடல் அளவிலும் மனத்தளவில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில், திருமணத்துக்கு முன்னும் பின்னும், அந்தரங்கமான பல விஷயங்களை ஒரு பெண் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அந்த விஷயங்களை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.