ஆர். பாலகிருஷ்ணன் இவற்றையெல்லாம் ஏன் பேசுகிறார்? ஏன் இப்போது பேசுகிறார்? நாம் வாழும் காலத்தின் அசைவியக்கங்களுக்கான எதிர்வினையே இந்தப் பேச்சுகளும் எழுத்துகளும், இன்றைய வாழ்வை தன் கவிதையின் மூலம் கதைகளின் மூலம் ஓவியத்தின் மூலம் எதிர்கொள்ளும் ஒரு கலைஞனைப்போல. ஒரு படைப்பாளியாக சங்க இலக்கியம். திருக்குறள் என்கிற இரு அடித்தளங்களில் அழுத்தமாகக் காலூன்றி நின்று கருத்தியல் தளத்தில் போராடும் ஒரு பண்பாட்டு அரசியலை மிக நுட்பமாக முன்னெடுக்கிறார். கொந்தளித்து எழ வேண்டிய ஒரு காலச்சூழலில் மந்த நிலையில் அமிழ்ந்திருக்கும் குடிமைச் சமூகத்தின் முகத்தில் நீர் அடித்து எழுப்பும் முயற்சிகள் இவை.
Be the first to rate this book.