இளமைக்கேயுள்ள உள்ளக் கிளர்ச்சியையும், உணர்வுக் கொந்தளிப்பையும் கருப்பொருளாகக் கொண்ட சண்முகனின் கதைகளின் ஊடும் பாவுமாக இருப்பவை கனவுகளும், துயர நினைவுகளுமேயாகும். காட்சித் தன்மையும், கற்பனாவாத இயல்பும், உணர்வுநயப் பாங்கும் ஒருங்கேயமைந்த அவரது மொழி இக்கதைகளை துல்லியமான நீர்வண்ண ஓவியங்களாக மாற்றி விடுகிறது. சில வண்ணங்கள் மாத்திரம் மிகுதியாக உபயோகிக்கும் ஓர் ஓவியனைப்போல இவரும் உள்ளத்தெறிப்பின்பாற்பட்ட சில உணர்விழைகளை மட்டுமே திரும்பத் திரும்ப மீட்டிப் பார்த்திருக்கிறார். மிகுந்த அழகுணர்ச்சியோடு தீட்டப்பட்டு, அதனாலேயே அத்தனை அழுத்தமாக அமையவில்லையோ என்ற ஏக்க உணர்வை கிளர்த்தும்படியாக அமைந்துவிட்டிருப்பவை இக்கதைகள்.
Be the first to rate this book.