எனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்படுத்திய தொகுதி என்பது ஒரு காரணம்.
இரண்டாவது, தமிழ்நாடு அரசால் 1982ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது... இந்தத் தொகுதியில் இருக்கும் பிரும்மம் கதையை அந்த ஆண்டின் சிறந்த கதையாக இலக்கியச் சிந்தனைக்காகத் தேர்ந்தெடுத்தவர் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு. இந்தக் கதை வெளிவந்தது கணையாழியில், தி. ஜானகிராமன் ஆசிரியராக இருந்தபோது. என்னை அவர் பாராட்டினார். மேலும் அவருடன் பெல்ஸ் சாலையிலிருந்து, ரத்னா கபே வரை நடந்து வந்து காப்பி சாப்பிட்டுச் செலவிட்டுக் களித்த ஒரு நீண்ட மாலை வேளையையும் பிரும்மம் எனக்குத் தந்தது.
- பிரபஞ்சன்
Be the first to rate this book.