சமயங்களில், நம் அன்றாட வாழ்வின் வேகத்தில் கவனிக்கத் தவறும் சக மனிதர்களுடனான உரையாடல்கள் வெளிப்படுத்தும் ஆழ்ந்த ஞானத்தை டாக்டர் இரா. ஆனந்தகுமார், இ.ஆ.ப., தன் கதைகளில் சற்று வேடிக்கையாகவும் தத்துவார்த்த விசாரணைகளோடும் நமக்குள் கடத்துகிறார்.
கதைகளினூடே பெரும் எழுத்தாளுமைகளும், தத்துவ ஆசான்களும் வந்து அன்றாட வாழ்வின் மேன்மைக்கு மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் படைப்புகளை இதுவரை அனுபவித்திராதவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு உத்தியும் கூட. கவனமாக தொகுக்கப்பட்ட அன்றாட நிகழ்வுகளும் அவை நிகழ்த்தும் மாயாஜாலங்களையும் சேர்த்து தேர்ந்த நெசவாளன் நெய்த மென்மையான ‘கைத்தறி’ – ‘ஒரு நிமிஷம்! ஒரு விஷயம்!’
Be the first to rate this book.