உலகத்திலேயே மிகப் பிரபலமாக விளாங்கும் ஒரு நிர்வாக் முறை. சுலபமாக நடைமுறைப்படுத்தக்கூடிய மூன்று ஒரு நிமிட ரகசியங்களை வெளிப்படுத்துகின்ற இப்புத்தகம் உங்கள் வேலையையும் வாழ்வையும் வெகுவாக மேம்படுத்தும்.
டாக்டர் ஸ்பென்சர் ஜான்சன், சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகின்ற சிந்தனையாளர் மற்றும் நூலாசிரியர். உலகெங்கும் விற்பனையில் சாதனைகளைக் குவித்துக் கொண்டிருக்கும் அவருடைய பத்துப் புத்தகங்களில், ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலும் ஒன்று.
நியூயார்க் டைம்ஸ் விற்பனைப் பட்டியலில் முதலாம் இடத்தை வகித்த ‘ஒரு நிமிட மேலாளர்’ என்ற புத்தகத்தை, பிரபல நிர்வாக ஆலோசனையாளரான கென் பிளான்சார்டுடன் இணைந்து அவர் எழுதினார். அப்புத்தகம் இன்றும் வியாபாரம் தொடர்பான புத்தக விற்பனைப் பட்டியலில் இடம்பெற்று வருகின்றது. அதோடு, உலகிலேயே மிகவும் பிரபலமான நிர்வாக வழிமுறையாக அது விளங்கி வருகிறது.
ஸ்பென்சர் ஜான்சன் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து உளவியலில் பி.ஏ. பட்டம் பெற்றார், ‘ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்’ கல்லூரியிலிருந்து எம்.டி. பட்டம் பெற்றார். பின்னர் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மேயோ மருத்துவ மையத்தில் அவர் மருத்துவப் பயிற்சி பெற்றார்.
42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்ற அவருடைய புத்தகங்களை உலகெங்கிலும் நான்கு கோடி மக்கள் படித்துள்ளனர். அவர் 2017ம் ஆண்டில் காலமானார்.
Be the first to rate this book.