உலகப் புகழ்பெற்ற எழுத்தாளாரான ஆர்தர் கோனன் டாயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறது. அந்த வரிசையில், ஷெர்லாக் ஹோம்ஸ் அறிமுகமாகும் முதல் கதை ( A Study in Scarlet) இது. மர்மமான முறையில் ஒரு கொலை நடந்துவிடுகிறது. சடலத்தின் பக்கத்தில் ரத்தத்தால் ஒரு விசித்திர சங்கேத குறிப்பு.
மிக வித்தியாசமான, மிக விநோதமான முறையில் இந்த வழக்கை எதிர்கொள்கிறார் ஷெர்லாக் ஹோம்ஸ். ஒருவருக்கும் புலப்படாத சில முக்கியத் தடயங்கள் இருவருக்கும் மட்டும் கிடைக்கின்றன. எப்படி இந்தக் கொலை நடந்திருக்கும் என்று மற்றவர்கள் யோசிக்க ஆரம்பிப்பதற்குள் கொலையாளி இவன் தான் என்று கண்டுபிடித்துவிடுகிறார் ஹோம்ஸ். பந்தயக் குதிரை பாயும் வேகத்தில் சீறிப்பாயும் துடிதுடிப்பான துப்பறியும் கதை.
Be the first to rate this book.