டிஜிட்டல் பயன்பாடு தொடர்பாக நவீன மருத்துவத்தின் தரவுகளை எல்லாம் தொகுத்துப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. அதனால் ஏற்படும் நேரடி விளைவுகள் மட்டும் எனக்கு இந்த அச்சத்தைத் தரவில்லை. மாறாக, மறைமுகமாக அது மனித வாழ்வில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றங்கள், சமூக நல்லிணக்கத்தின் சமநிலையின் மீது அது ஏற்படுத்திவரும் தாக்கங்கள், வெறும் வணிகத்தை மட்டும் முதன்மையாகக் கொண்டு மக்களை ஒரு பண்டமாகப் பாவிக்கும் கருத்தாக்கங்கள், மந்தப்பட்டுவரும் மனிதர்களின் நுண்ணுணர்வுகள் என அத்தனையும் சேர்ந்து நமது எதிர்காலத்தின்மீது பேரச்சமாக எனக்குள் கவிழ்கிறது. அறிவியல்பூர்வமாக டிஜிட்டல் சாதனங்களைப் பற்றியும், அதன் அளவுக்கதிகமான பயன்பாட்டைப் பற்றியும் விவாதிக்கும் புத்தகமாக இது இருக்கும்.
Be the first to rate this book.